பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
நெறி செய்தருளி, தன் சீர் அடியார் பொன் அடிக்கே குறி செய்துகொண்டு, என்னை ஆண்ட பிரான் குணம் பரவி, முறி செய்து, நம்மை முழுது உழற்றும் பழ வினையைக் கிறி செய்தவா பாடி பூவல்லி கொய்யாமோ!