சுரர் உலகு, நரர்கள் பயில் தரணிதலம், முரண் அழிய, அரண
மதில் முப்-
புரம் எரிய, விரவு வகை சர விசை கொள் கரம் உடைய
பரமன் இடம் ஆம்
வரம் அருள வரல் முறையின் நிரல் நிறை கொள்வரு சுருதிசிர
உரையினால்,
பிரமன் உயர் அரன் எழில் கொள் சரண இணை பரவ, வளர்
பிரமபுரமே.