திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

பகல் ஒளிசெய் நக மணியை, முகை மலரை, நிகழ் சரண
அகவு முனிவர்க்கு
அகலம் மலி சகல கலை மிக உரைசெய் முகம் உடைய
பகவன் இடம் ஆம்
பகை களையும் வகையில் அறுமுக இறையை மிக அருள,
நிகர் இல் இமையோர்
புக, உலகு புகழ, எழில் திகழ, நிகழ் அலர் பெருகு
புகலிநகரே.

பொருள்

குரலிசை
காணொளி