திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

அறம் அழிவு பெற உலகு தெறு புயவன் விறல் அழிய, நிறுவி
விரல், மா-
மறையின் ஒலி முறை முரல்செய் பிறை எயிறன் உற, அருளும்
இறைவன் இடம் ஆம்
குறைவு இல் மிக நிறைதை உழி, மறை அமரர் நிறை அருள,
முறையொடு வரும்
புறவன் எதிர் நிறை நிலவு பொறையன் உடல் பெற, அருளு
புறவம் அதுவே.

பொருள்

குரலிசை
காணொளி