ஒழுகல் அரிது அழி கலியில், உழி உலகு பழி பெருகு
வழியை நினையா,
முழுது உடலில் எழும் மயிர்கள் தழுவும் முனிகுழுவினொடு,
கெழுவு சிவனைத்
தொழுது, உலகில் இழுகும் மலம் அழியும் வகை கழுவும்
உரை கழுமல நகர்
பழுது இல் இறை எழுதும் மொழி தமிழ் விரகன் வழி
மொழிகள் மொழி தகையவே.