திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

நச்சு அரவு கச்சு என அசைச்சு, மதி உச்சியின் மிலைச்சு, ஒரு
கையால்
மெய்ச் சிரம் அணைச்சு, உலகில் நிச்சம் இடு பிச்சை அமர்
பிச்சன் இடம் ஆம்
மச்சம் மதம் நச்சி மதமச் சிறுமியைச் செய் தவ அச்ச விரதக்
கொச்சை முரவு அச்சர் பணிய, சுரர்கள் நச்சி மிடை
கொச்சைநகரே.

பொருள்

குரலிசை
காணொளி