அம் கண் மதி, கங்கை நதி, வெங்கண் அரவங்கள், எழில்
தங்கும் இதழித்
துங்க மலர், தங்கு சடை அங்கி நிகர் எங்கள் இறை தங்கும்
இடம் ஆம்
வெங்கதிர் விளங்கு உலகம் எங்கும் எதிர் பொங்கு எரி
புலன்கள் களைவோர்
வெங் குரு விளங்கி உமைபங்கர் சரணங்கள் பணி வெங்குரு அதே.