“நிராமய! பராபர! புராதன! பராவு சிவ! ராக! அருள்!” என்று,
இராவும் எதிராயது பராய் நினை புராணன், அமராதி பதி ஆம்
அராமிசை இராத எழில் தரு ஆய அர பராயண வராக உரு
வா-
தராயனை விராய் எரி பராய், மிகு தராய் மொழி விராய
பதியே.