பாழி உறை வேழம் நிகர் பாழ் அமணர், சூழும் உடலாளர்,
உணரா
ஏழின் இசை யாழின் மொழி ஏழை அவள் வாழும் இறை
தாழும் இடம் ஆம்
கீழ், இசை கொள் மேல் உலகில், வாழ் அரசு சூழ் அரசு
வாழ, அரனுக்கு
ஆழிய சில்காழி செய, ஏழ் உலகில் ஊழி வளர் காழி
நகரே.