அரணை உறு முரணர் பலர் மரணம் வர, இரணம் மதில் அரம்
மலி படைக்
கரம் விசிறு விரகன், அமர் கரணன், உயர் பரன், நெறி கொள்
கரனது இடம் ஆம்
பரவு அமுது விரவ, விடல் புரளம் உறும் அரவை அரி சிரம்
அரிய, அச்
சிரம் அரன சரணம் அவை பரவ, இரு கிரகம் அமர் சிரபுரம்
அதே.