விண் பயில, மண் பகிரி, வண் பிரமன் எண் பெரிய பண்
படை கொள் மால்,
கண் பரியும் ஒண்பு ஒழிய, நுண்பொருள்கள் தண் புகழ் கொள்
கண்டன் இடம் ஆம்
மண் பரியும் ஒண்பு ஒழிய, நுண்பு சகர் புண் பயில விண்
படர, அச்
சண்பை மொழி பண்ப முனி கண் பழி செய் பண்பு களை
சண்பை நகரே.