திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்

60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

திரு ஆர் பெருந்துறை மேய பிரான் என் பிறவிக்
கரு வேர் அறுத்தபின், யாவரையும் கண்டது இல்லை;
அரு ஆய், உருவமும் ஆய பிரான், அவன் மருவும்
திருவாரூர் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ!

பொருள்

குரலிசை
காணொளி