திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்

60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உவலைச் சமயங்கள், ஒவ்வாத சாத்திரம், ஆம்
சவலைக் கடல் உளனாய்க் கிடந்து, தடுமாறும்
கவலைக் கெடுத்து, கழல் இணைகள் தந்தருளும்
செயலைப் பரவி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ!

பொருள்

குரலிசை
காணொளி