திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்

60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கறங்கு ஓலை போல்வதுஓர் காயப் பிறப்போடுஇறப்பு என்னும்,
அறம், பாவம், என்று இரண்டு அச்சம் தவிர்த்து, என்னை ஆண்டுகொண்டான்;
மறந்தேயும் தன் கழல் நான் மறவாவண்ணம் நல்கிய, அத்
திறம் பாடல் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ!

பொருள்

குரலிசை
காணொளி