திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கவள மாளிகைத் திவளும் யானையின்
கவுள்தலைக் கும்பத்
தும்பர்ப் பதணத் தம்புதந் திளைக்கும்
பெருவளம் தழீஇத் திருவளர் புகலி
விளங்கப் பிறந்த வளங்கொள் சம்பந்தன்
கருதியஞ் செவ்விச் சுருதியஞ் சிலம்பில்
தேமரு தினைவளர் காமரு புனத்து
மும்மதஞ் சொரியும் வெம்முகக் கைம்மா
மூரி மருப்பின் சீரிய முத்துகக்
10 கொடுஞ்சிலை வளைத்தே கடுஞ்சரந் துரந்து
முற்பட வந்து முயன்றங் குதவிசெய்
வெற்பனுக் கல்லது
கணங்கணி மென்முலைச் சுரிகுழல் மாதினை
மணஞ்செய மதிப்பது நமக்குவன் பழியே.

பொருள்

குரலிசை
காணொளி