திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சொற்செறி நீள்கவி செய்தன்று வைகையில் தொல்லமணர்
பற்செறி யாவண்ணங் காத்தசம் பந்தன் பயில்சிலம்பில்
கற்செறி வார்சுனை நீர்குடைந் தாடுங் கனங்குழையை
இற்செறி யாவண்ணம் காத்திலை வாழி!யிரும்புனமே.

பொருள்

குரலிசை
காணொளி