புனலற வறந்த புன்முளி சுரத்துச்
சினமலி வேடர் செஞ்சுர முரீஇப்
படுகலைக் குளம்பின் முடுகுநாற்றத்
தாடு மரவி னகடு தீயப்
5 பாடு தகையின் பஞ்சுரங் கேட்டுக்
கள்ளியங் கவட்டிடைப் பள்ளி கொள்ளும்
பொறிவரிப் புறவே!யுறவலைகாண்நீ
நறைகமழ்
தேம்புனல் வாவித் திருக்கழுமலத்துப்
பையர வசைத்ததெய்வ நாயகன்
10 தன்னருள்பெற்ற பொன்னணி குன்றம்
மானசம் பந்தம் மண்மிசைத் துறந்த
ஞானசம் பந்தனை நயவார் கிளைபோல்
வினையே னிருக்கும் மனைபிரி யாத
வஞ்சி மருங்கு லஞ்சொற் கிள்ளை
15 ஏதிலன்பின்செல விலக்கா தொழிந்தனை
ஆதலின் புறவே யுறவலை நீயே.