திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தேமலி கமலப் பூமலி படப்பைத்
தலைமுக டேறி யிளவெயிற் காயும்
சுவடிச் சிறுகாற் கற்கட கத்தைச்
சுவடிச் சியங்கும் சூல்நரி முதுகைத்
5 துன்னி யெழுந்து செந்நெல் மோதுங்
காழி நாட்டுக் கவுணியர் குலத்தை
வாழத் தோன்றிய வண்டமிழ் விரகன்
தெண்டிரைக் கடல்வாய்க்
காண்தகு செவ்விக் களிறுக ளுகுத்த

10 முட்டைமுன் கவரும் பெட்டையங் குருகே
வாடை யடிப்ப வைகறைப் போதில்
தனிநீ போந்து பனிநீர் ஒழுகக்
கூசிக் குளிர்ந்து பேசா திருந்து
மேனி வெளுத்த காரண முரையாய்

15 இங்குத் தணந்தெய்தி நுமரும்
இன்னம்வந் திலரோ சொல்லிளங் குருகே.

பொருள்

குரலிசை
காணொளி