வளைகால் மந்தி மாமரப் பொந்தில்
விளைதே னுண்டு வேணுவின் துணியால்
பாறை யில்துயில்பனைக்கை வேழத்தை
உந்தி யெழுப்பு மந்தண்சிலம்ப
அஃதிங்கு
5 என்னைய ரிங்கு வருவர் பலரே
அன்னை காணி லலர்தூற் றும்மே
சிறுபரற் கரந்த விளிகுரற் கிங்கிணி
சேவடி புல்லிச் சில்குர லியற்றி
அமுதுண் செவ்வா யருவி தூங்கத
10 தாளம் பிரியாத் தடக்கை யசைத்துச்
சிறுகூத் தியற்றிச் சிவனருள் பெற்ற
நற்றமிழ் விரகன் பற்றலர் போல
இடுங்கிய மனத்தொடு மொடுங்கிய சென்று
பருதியுங் குடகடல் பாய்ந்தனன்
15 கருதிநிற் பதுபிழை கங்குலிப் புனத்தே.