பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
இழித்தன ஏழ் ஏழ்பிறப்பும் அறுத்தன; என் மனத்தே பொழித்தன; போர் எழில் கூற்றை உதைத்தன; போற்றவர்க்கு ஆய்க் கிழித்தன, தக்கன் கிளர் ஒளி வேள்வியைக் கீழ முன் சென்று அழித்தன-ஆறு அங்கம் ஆன ஐயாறன் அடித்தலமே.