பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
வலியான் தலைபத்தும் வாய் விட்டு அலற வரை அடர்த்து மெலியா வலி உடைக் கூற்றை உதைத்து, விண்ணோர்கள் முன்னே பலி சேர் படு கடைப் பார்த்து, பல்-நாளும் பலர் இகழ அலி ஆம் நிலை நிற்கும்-ஐயன் ஐயாறன் அடித்தலமே.