பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பொலம் புண்டரிகப் புது மலர் போல்வன; “போற்றி!” என்பார் புலம்பும் பொழுதும் புணர் துணை ஆவன; பொன் அனையாள் சிலம்பும், செறி பாடகமும், செழுங் கிண்கிணித்திரளும், அலம்பும் திருவடி-காண்க!-ஐயாறன் அடித்தலமே.