பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
உற்றார் இலாதார்க்கு உறு துணை ஆவன; ஓதி நன் நூல் கற்றார் பரவப் பெருமை உடையன; காதல் செய்ய கிற்பார் தமக்குக் கிளர் ஒளி வானகம் தான் கொடுக்கும்; அற்றார்க்கு அரும்பொருள்-காண்க!-ஐயாறன் அடித்தலமே.