பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
நின் போல் அமரர்கள் நீள் முடி சாய்த்து நிமிர்ந்து உகுத்த பைம்போது உழக்கிப் பவளம் தழைப்பன-பாங்கு அறியா என் போலிகள் பறித்து இட்ட இலையும் முகையும் எல்லாம் அம் போது எனக் கொள்ளும் ஐயன் ஐயாறன் அடித்தலமே.