திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பிறவாது ஒரு நாழிகை கழித்து என் பிள்ளை பிறக்கும் பரிசு என் கால்
உற ஆர்த்து எடுத்துத் தூக்கும் என, உற்ற செயல் மற்று அது முற்றி,
அறவாணர்கள் சொல்லிய காலம் அணையப் பிணிவிட்டு, அருமணியை
இறவாது ஒழிவாள் பெற்று எடுத்து என் கோச்செங் கண்ணனோ என்றாள்.

பொருள்

குரலிசை
காணொளி