திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உலாநீர்க் கங்கை ஒருசடைக் கரந்து
புலால்நீர் ஒழுகப் பொருகளி றுரித்த
பூத நாதன், ஆதி மூர்த்தி,
திருமட மலைமகட்(கு) ஒருகூறு கொடுத்துத்தன்
அன்பின் அமைத்தவன் ஆரூர் நன்பகல்
வலம்புரி அடுப்பா மாமுத் தரிசி
சலஞ்சலம் நிறைய ஏற்றி நலந்திகழ்
பவளச் செந்தீ மூட்டிப் பொலம்பட
இப்பியந் துடுப்பால் ஒப்பத் துழாவி
அடாஅ(து) அட்ட அமுதம் வாய்மடுத்
திடாஅ ஆயமோடு உண்ணும் பொழுதில்
திருந்திழைப் பணைத்தோள் தேமொழி மாதே,
விருந்தின் அடியேற்(கு)ருளுதி யோஎன
முலைமுகம் நோக்கி முறுவலித் திறைஞ்சலின்
நறைகமழ் வெண்ணெய்ச் சிறுநுண் துள்ளி
பொங்குபுனல் உற்றது போலஎன்
அங்க மெல்லாந் தானா யினனே.

பொருள்

குரலிசை
காணொளி