திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இறைத்தார் புரமெய்த வில்லிமை நல்லிம வான்மகட்கு
மறைத்தார் கருங்குன்றம் வெண்குன்றம் செங்குன்ற மன்னற்குன்றம்
நிறைத்தார் நெடுங்குன்றம் நீள்கழுக் குன்றமென் தீவினைகள்
குறைத்தார் முதுகுன்றம் ஏகம்பர் குன்றென்று கூறுமினே

பொருள்

குரலிசை
காணொளி