திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உயிரா யினவன்பர் தேர்வரக் கேட்டுமுன் வாட்டமுற்ற
பயிரார் புயல்பெற்ற தென்னநம் பல்வளை பான்மைகளாம்
தயிரார்பால் நெய்யொடும் ஆடிய ஏகம்பர் தம்மருள்போல்
கையிரா வளையழுந் தக்கச் சிறுத்தனம் கார்மயிலே.

பொருள்

குரலிசை
காணொளி