திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பூந்தண் பொன்னி எந் நாளும் பொய்யாது அளிக்கும் புனல் நாட்டு
வாய்ந்த மண்ணித் தென் கரையில் மன்ன முன் நாள் வரை கிழிய
ஏந்தும் அயில் வேல் நிலை காட்டி இமையோர் இகல் வெம் பகை கடக்கும்
சேந்தன் அளித்த திருமறையோர் மூதூர் செல்வச் சேய்ஞ்லூர்.

பொருள்

குரலிசை
காணொளி