திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உள்ளும் தகைமை இனிப் பிற வேறு உளவே உழை மான் மறிக் கன்று
துள்ளும் கரத்தார் அணி பணியின் சுடர் சூழ் மணிகள் சுரநதி நீர்
தெள்ளும் சடையார் தேவர்கள் தம்பிராட்டி உடனே சேரமிசைக்
கொள்ளும் சின மால் விடைத் தேவர் குலம் அன்றோ இச் சுரபி குலம்.

பொருள்

குரலிசை
காணொளி