திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பண்ணின் பயனாம் நல் இசையும் பாலின் பயனாம் இன் சுவையும்
கண்ணின் பயனாம் பெருகு ஒளியும் கருத்தின் பயனாம் எழுத்து அஞ்சும்
விண்ணின் பயனாம் பொழி மழையும் வேதப் பயனாம் சைவமும் போல்
மண்ணின் பயனாம் அப்பதியின் வளத்தின் பெருமை வரம்பு உடைத்தோ.

பொருள்

குரலிசை
காணொளி