பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பெருமை பிறங்கும் அப்பதியின் மறையோர் தம் உள் பெருமனை வாழ் தருமம் நிலவு காசிப கோத்திரத்துத் தலைமை சால் மரபில் அருமை மணியும் அளித்து அதுவே நஞ்சும் அளிக்கும் அரவு போல் இருமை வினைக்கும் ஒரு வடிவு ஆம் எச்ச தத்தன் உளன் ஆனான்.