திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பரவ மேல் மேல் எழும் பரிவும் பழைய பான்மை மிகும் பண்பும்
விரவும் மேதக்கவர் தம்பால் மேவும் பெருமை வெளிப் படுப்பான்
அரவம் மேவும் சடைமுடியார் அருள் ஆம் என்ன அறிவு அழிந்து
குரவம் மேவும் முது மறையோன் கோபம் மேவும் படி கண்டான்.

பொருள்

குரலிசை
காணொளி