பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
யானே இனி இந்நிரை மேய்ப்பன் என்றார் அஞ்சி இடை மகனும் தான் நேர் இறைஞ்சி விட்டு அகன்றான் தாமும் மறையோர் இசைவினால் ஆனே நெருங்கும் பேர் ஆயம் அளிப்பார் ஆகிப் பைங் கூழ்க்கு வானே என்ன நிரை காக்க வந்தார் தெய்வ மறைச் சிறுவர்.