திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தண்டி நமக்குக் குளம் கல்லக் கண்ட அமணர் தரியார் ஆய்
மிண்டு செய்து பணிவிலக்க வெகுண்டான்; அவன்பால் நீ மேவிக்
கொண்ட குறிப்பால் அவன் கருத்தை முடிப்பாய் என்று கொள அருளித்
தொண்டர் இடுக்கண் நீங்க எழுந்து அருளினார் அத்தொழில் உவப்பார்.

பொருள்

குரலிசை
காணொளி