பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
ஒன்றே நினைந்திருந்தேன்; ஒன்றே துணிந்தொழிந்தேன்; ஒன்றையென் உள்ளத்தின் உள்ளடைத்தேன் - ஒன்றேகாண் கங்கையான், திங்கட் கதிர்முடியான் பொங்கொளிசேர் அங்கையாற்(கு) ஆளாம் அது.