திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஓங்கிப் பரந்தெழுந்த ஒள்ளிலவந் தண்போதைத்
தூங்குவதோர் கொள்ளி எனக்கடுவன் - மூங்கில்
தழையிறுத்துக் கொண்டோச்சும் ஈங்கோயே, சங்கக்
குழையிறுத்த காதுடையான் குன்று.

பொருள்

குரலிசை
காணொளி