பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
காந்தள்அங் கைத்தலங்கள் காட்டக் களிமஞ்ஞை கூந்தல் விரித்துடனே கூத்தாடச் - சாய்ந்திரங்கி ஏர்க்கொன்றை பொன்கொடுக்கும் ஈங்கோயே, செஞ்சடைமேல் கார்க்கொன்றை ஏன்றான் கடறு.