திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சென்னி மிசை நீர் தரித்த பிரான் அருளே சிந்தை செய்து எழுவார்;
நல் நீரப் பொய்கை நடுப்புக்கு, நாதர் நாமம் நவின்று ஏத்தி
அந் நீர் முகந்து கொண்டு ஏறி அப்பர் கோயில் அடைந்து அகல் உள்
முந்நீர் உலகம் அதிசயிப்ப முறுக்கும் திரி மேல் நீர் வார்த்தார்.

பொருள்

குரலிசை
காணொளி