பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மற்று அவர் செயல் இன்ன தன்மையது ஆக, மால் அயன் ஆன அக் கொற்ற ஏனமும் அன்னமும் தெரியாத கொள்கையர் ஆயினார், பெற்றம் ஊர்வதும் இன்றி நீடிய பேதையாள்உடன் இன்றி ஓர் நல் தவத்தவர் வேடமே கொடு ஞாலம் உய்ந்திட நண்ணினார்.