திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வந்த பின் மனைவியாரும் வாய்தலின் நின்று வாங்கிச்
சிந்தையில் விரும்பி நீரில் சேற்றினை அலம்பி ஊற்றி,
‘வெம் தழல் அடுப்பின் மூட்ட விறகு இல்லை’ என்ன, மேலோர்,
அந்தம் இல் மனையில் நீடும் அலக்கினை அறுத்து வீழ்த்தார்.

பொருள்

குரலிசை
காணொளி