திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அப் பொன் பதி வாழ் வணிகக் குலத்து ஆன்ற தொன்மைச்
செப்பத் தகு சீர்க் குடி செய் தவம் செய்ய வந்தார்;
எப் பற்றினையும் அறுத்து, ஏறுஉகைத்து ஏறுவார் தாள்
மெய்ப் பற்று எனப் பற்றி விடாத விருப்பின் மிக்கார்.

பொருள்

குரலிசை
காணொளி