திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கயல் பாய் பைந் தடம் நந்து ஊன் கழிந்த பெருங் கருங்குழிசி,
வியல்வாய் வெள் வளைத் தரள, மலர்வேரி உலைப்பெய்து அங்கு
அயல்ஆமை அடுப்பு ஏற்றி, அரக்கு ஆம்பல் நெருப்பு ஊதும்,
வயல் மாதர் சிறுமகளிர் விளையாட்டு; வரம்பு எல்லாம்.

பொருள்

குரலிசை
காணொளி