திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கண்டம் நிறங்கறுப்பக் கவ்வைக்கருங்கடல்நஞ்(சு)
உண்டல் புரிந்துகந்த உத்தமற்குத் -தொண்டடைந்தார்
கூசுவரே கூற்றைக் குறுகு வரேதீக்கொடுமை,
பேசுவரே மற்றொருவர் பேச்சு.

பொருள்

குரலிசை
காணொளி