ஆறு சூடிய ஐயர் மெய் அடிமை அளவிலாதது ஓர் உளம் நிறை அருளால்
நீறு சேர் திரு மேனியர் மனத்து நினைத்த யாவையும் வினைப்பட முடித்து
மாறு இலாத நல் நெறியினில் விளங்கும் மனை அறம் புரி மகிழ்ச்சியின் வந்த
பேறு எலாம் அவர் ஏவின செய்யும் பெருமையே எனப் பேணி வாழ் நாளில்.