மாது தன்னை முன் கொடுத்த மாதவர்தாம் மனம் மகிழ்ந்து பேர் உவகையின் மலர்ந்தே
யாது நான் இனிச் செய் பணி?‘ என்றே இறைஞ்சி நின்றவர் தம் எதிர் நோக்கிச்
சாதி வேதியர் ஆகிய தலைவர் ‘தையல் தன்னை யான் தனிக் கொடு போகக்
காதல் மேவிய சுற்றமும் பதியும் கடக்க நீ துணை போதுக’