இன்று நீர் எனக்கு அருள் செய்தது இதுவேல் என் உயிர்க்கு ஒரு நாத! நீர் உரைத்தது
ஒன்றை நான் செய்ம் அத்தனை அல்லால் உரிமை வேறு உளதோ எனக்கு? என்று
தன் தனிப் பெரும் கணவரை வணங்கத் தாழ்ந்து தொண்டனார் தாம் எதிர் வணங்கச்
சென்று மாதவன் சேவடி பணிந்து திகைத்து நின்றனள் திருவி