ஆயும் நுண் பொருள் ஆகியும் வெளியே அம்பலத்து உள் நின்று ஆடுவார் உம்பர்
நாயகிக்கும் அஃது அறியவோ? பிரியா நங்கைதான் அறியாமையோ? அறியோம்;
தூய நீறு பொன் மேனியில் விளங்கத் தூர்த்த வேடமும் தோன்ற வேதியராய்
மாய வண்ணமே கொண்டு தம் தொண்டர் மறாத வண்ணமும் காட்டுவான் வந்த