திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

‘நல்ல கோவணம் கொடுப்பன்’ என்று உலகின் மேல் நாளும்
சொல்லு வித்தது என் கோவணம் கொள்வது துணிந்தோ?
ஒல்லை ஈங்கு உறு வாணிபம் அழகிதே உமக்கு? என்று
எல்லை இல்லவன் எரி துள்ளினால் என வெகுண்டான்.

பொருள்

குரலிசை
காணொளி