பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அடல் வளவர் ஆணையினால் அமைச்சர்களும் புறம் போந்து கடல் அனைய நெடும் படையைக் கைவகுத்து மேல் செல்வார் படர் வனமும் நெடும் கிரியும் பயில் அரணும் பொடி ஆக மிடல் உடை நால் கருவி உற வெஞ் சமரம் மிக விளைத்தார்.